சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி
நடிகை வரலட்சுமி, ‛பேடா போடி' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். பின்னர், வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும், வெப்சீரியல்களிலும் நடித்தார். சமீபகாலமாக தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். அங்கே அவருக்கு தனி மார்க்கெட் உள்ளது.
திருமணத்துக்கு பின் இப்போது அடுத்த கட்டமாக இயக்குனர் ஆகியுள்ளார். அந்த படத்தின் தலைப்பு சரஸ்வதி. இதில் அவரே முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியாமணி, நவின் சந்திரா உட்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
தோசா டைரீஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி, இந்த படத்தை அவரே தனது சகோதரி பூஜாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார். வரலட்சுமி சகோதரி பூஜா ரேடான் நிறுவனம் தயாரித்த சீரியல்கள், சினிமாவுக்கு புரடக் ஷன் நிர்வாகியாக பணியாற்றிவர். இப்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்.