உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாந்தனுவின் ஏக்கம் தீருமா

சாந்தனுவின் ஏக்கம் தீருமா

சாந்தனு நடித்த மலையாள படமான பல்டி நேற்று தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. தமிழை விட மலையாளத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த படம் குறித்து அவரிடம் கேட்டபோது 'மெஜந்தா என்ற படத்தில் நடிக்கிறேன். இக்லு என்ற படத்தை இயக்கியவரின் அடுத்த படைப்பு அது. காதல் கலந்த எமோஷனல் ஸ்டோரி. ஒரு வெப்சீரியலிலும் நடிக்கிறேன். அதில் நான் தியாகராஜ பாகவதர் கெட்அப்பில் வருவதாக வதந்தி கிளம்பியது. அந்த கெட்அப்பில் நடிக்கவில்லை. ஆனால் அந்த வெப்சீரியலில் நஸ்ரியாவுடன் நடிக்கிறேன். விரைவில் முறைப்படி அறிவிப்பு வரும்.

அதற்கு அடுத்ததாக நான் சிவப்பு மனிதன் திரு இயக்கத்தில் ஒரு மல்டிஸ்டார் படத்தில் நடிக்கப்போகிறேன். அதில் ஜெய், வரலட்சுமி உட்பட பலரும் இருக்கிறார்கள். அது ஜாலியான படம். எனக்கு ப்ளூ ஸ்டார் படத்திலும் ஹீரோயின் இல்லை. பல்டியிலும் ஹீரோயின் இல்லை. அப்பா, அம்மா நடித்த படங்கள் பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றன. அவர்களின் பாடல் இன்றும் பேசப்படுகிறது. அந்த மாதிரி என் படங்களும் பேசப்பட வேண்டும்' என்கிறார்.

விஜயின் கட்சியில் நீங்கள் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ‛‛சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றுதான் வந்தேன். இப்போது வரை என்னுடைய இலக்கை அடைய முடியவில்லை. அதனால் முதலில் சினிமாவில் வெற்றி பெற்று காட்டுகிறேன். அதன்பிறகு அரசியல் குறித்து யோசிக்கலாம்'' என்று கூறியுள்ளார் சாந்தனு.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !