உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?

ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?

களவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஓவியாவுக்கு தமிழ் சினிமாவி்ல் தனி மவுசு ஏற்பட்டது. கலகலப்பு படத்தில் அவர் ஆடிய ஹாட் பாடலை தொடர்ந்து அவர் சம்பளமும் உயர்ந்தது. ஆனால், தவறான படங்களின் தேர்வு, வழி நடத்த சரியான ஆட்கள் இல்லாதது, அம்மாவின் மரணம், சில மீள முடியாத பழக்க வழக்கங்களால் அவர் பாதை மாறியது. ஆனாலும், பிக்பாஸ் சீசனில் அவர் கலந்து கொண்டபின் மீண்டும் அவர் மார்க்கெட் ஏறியது. ஓவியா ஆர்மியால் சில காலம் பேசப்பட்டார். மீண்டும் அதே தவறுகளால் காணாமல் போனார் ஓவியா. இப்போது எங்கே இருக்கிறார், யாருடன் வசிக்கிறார். எந்த படத்தில் நடிக்கிறார். வருமானத்துக்கு என்ன செய்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். ஆனால், யாருக்கும் பதில் தெரிவதில்லை.

ஒரு சிலர் தனது பாய்பிரண்டுடன் இருக்கிறார் என்றும், ஒரு சிலர் கேரளாவிலுள்ள வீட்டில் வசிக்கிறார் என்றும், இன்னொரு தரப்பின் வெளிநாட்டில் இருக்கிறார் என்று ம் கூறுகிறார்கள். சினிமா, பொதுநிகழ்ச்சிகளுக்கு வருவதையும் ஓவியா குறைத்துவிட்டார். ஒல்லியாகி ஆளேமாறிவிட்டார் என்கிறார்கள். அவர் சினிமாவில் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட, அவர் குணம், உடல், நடவடிக்கைகள் காரணமாக, அவரை யாரும் படங்களில் புக் பண்ணுவதில்லை.

இதற்கிடையே, கரூர் விவகாரத்தில் விஜய் குறித்து காரசாரமாக பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஓவியா. விஜய் ரசிகர்கள் அவரை திட்டிதீர்க்கிறார்கள். விஜய் மீது ஓவியாவுக்கு கோபமில்லை. அவர் டீமில் இருக்கும் ஒரு முக்கியமான நபரால் அவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டார். அந்த கோபத்தில் அப்படி பதிவிட்டுள்ளார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஓவியாவின் இப்போதைய வயது 35.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !