சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ்
ADDED : 45 days ago
மிஸ்டர் பச்சான், சில மாதங்களுக்கு முன் வெளியான ‛கிங்டம்' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ‛‛சினிமாவிற்கு மொழி என்பதே கிடையாது. எல்லா மொழிகளிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். தெலுங்கு தாண்டி தமிழ் சினிமாவிலும் நடிக்க விரும்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன். நல்ல கதை, வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் தமிழிலும் நடிப்பேன். சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. குறிப்பாக நாயகிகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வருகின்றன. இதன்மூலம் நாயகிகளுக்கும் அடையாளம் கிடைக்கிறது'' என்றார்.