உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர்

இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர்

‛போர போக்குல' என்ற இசை வீடியோவில் யதீஷ்வர் ராஜா பாடிய பாடலை ரஜினிகாந்த், கமல்ஹாசன் வெளியிட்டுள்ளனர். இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடல் இளையராஜா குரலிலும், யதீஷ்வர் ராஜா குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. யதீஷ்வர் வேறு யாருமல்ல இளையராஜா பேரன், கார்த்திக்ராஜா மகன் ஆவார்.

இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் மகன் ரித்திஷ் நடிக்க, அவருக்கு இணையாக பைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர். இப்பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே. இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.

இந்த ஆல்பம் மூலம் இளையராஜா வீட்டில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் உருவாகி உள்ளார். அவர் குடும்பத்தில் கங்கை அமரன், கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, பிரேம்ஜி அமரன், ஆகியோரும் இசையமைப்பாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !