செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
தமிழில் அனிமேஷன் படங்கள் வெகு குறைவு. வெளிநாடுகளை போல இங்கே அதற்கான மார்க்கெட், வரவேற்பு உருவாகவில்லை. ஆனாலும், அவ்வப்போது அந்தவகை படங்கள் வருகின்றன. பி.நாராயணன் என்பவர் 'கிகி & கொகொ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
படம் குறித்து அவர் கூறுகையில், ‛‛கிகி என்ற அன்பான செல்லப்பிராணிக்கும், கொகொ என்ற இளம் பெண்ணுக்கும் இடையிலான அழகான கதையை இந்தப் படம் சொல்கிறது. அவர்களின் பயணம் அன்பு, வாழ்க்கை பாடங்கள் என தலைமுறைகள் தாண்டி பார்வையாளர்கள் மனதைத் தொடும் மேஜிக்கல் தருணங்களைக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான படங்கள்தான் இன்றைய தேவை. அந்த வகையில் 'கிகி & கொகொ' படத்தில் நட்பு, அன்பு, குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு இடையிலான உறவு பற்றி பேசியிருக்கிறோம். குழந்தைகளுக்கான கல்வி இன்னொரு விஷயம் இருக்கிறது. அதை எப்படி சொல்லி தருகிறோம் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்.