வாசகர்கள் கருத்துகள் (1)
action king arjun sandai pottu naatai ellam jaihindh nu solli kaapatri sambaaricha thuttai ippo appanum mavanum kaali panna poraanga ( maamannar kaasu thaane)
ஹீரோவாக அறிமுகம் ஆன தம்பிராமையா மகன் உமாபதி, அப்பாவை வைத்து ராஜாகிளி என்ற படத்தை இயக்கினார். அந்த படத்துக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. இப்போது இரண்டாவது முறையாக அப்பா தம்பி ராமையாவுடன் இணைந்து படம் இயக்குகிறார். இந்த படத்தில் நட்டி ஹீரோ. தம்பி ராமையாவுக்கு முக்கியான வேடம்.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக இது உருவாகிறது. ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய் உட்பட பலர் நடிக்கிறார்கள். நட்டி சுப்ரமணியம் - தம்பி ராமையா இணைந்து நடிக்கும் முதல் படம் இது. கதை, உரையாடல்களை தம்பி ராமையா எழுதி இருக்க, மகன் உமாபதி இயக்குகிறார். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்ய, தர்புகா சிவா இசையமைக்கிறார். துபாய் தொழிலதிபரான கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்தவர் உமாபதி. மாமனார் அர்ஜூன் இயக்கத்தில் அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
action king arjun sandai pottu naatai ellam jaihindh nu solli kaapatri sambaaricha thuttai ippo appanum mavanum kaali panna poraanga ( maamannar kaasu thaane)