நடிகை சமந்தா வெப் சீரியலில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளாகவே ஐதராபாத்தில் குடியிருந்து வருகிறார். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஐதராபாத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் வசித்து வந்தார்கள். 2022ல் விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா ஐதராபாத் - மும்பை என்று பயணிக்க தொடங்கி விட்டார். ஐதராபாத்தில் ஒரு பண்ணை வீடு வைத்திருக்கும் சமந்தா, தற்போது மும்பையில் ஒரு புதிய வீடு வாங்கியுள்ளார் . அது குறித்த புகைப்படங்களை இணைய பக்கத்தில், புதிய தொடக்கங்கள் என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். அதில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தனது வீட்டின் புகைப்படங்களையும், பல்வேறு கடவுள்களின் சிலைகளுடன் கூடிய பூஜை இடத்தை காட்டும் உட்புற படத்தையும் பகிர்ந்து உள்ளார் சமந்தா. மும்பையில் உள்ள இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது சமந்தா குடியேறியுள்ளார்.