அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி
சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். 46 வயதில் அவரின் மறைவு வெள்ளித்திரை, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் படத்திறப்பு விழா சென்னையில் இன்று(அக்., 4) நடந்தது. இதில் அவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அப்போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கூறியது... ‛‛என் அம்மா டான்சராக வாழ்க்கையை தொடங்கியவர். அப்பா மீதான அன்பை இறுதி ஊர்வலத்தில் டான்ஸ் ஆடி வெளிப்படுத்தினார். அதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் புரிதல் அவ்வளவுதான். என் அப்பா மரணத்துக்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். அனைத்தையும் பார்க்கிறேன். அப்பா மறைவு துயரத்தில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை..அது பற்றி பேச விரும்பவில்லை. அவர் உடலில் பெயிண்ட் அடித்து ரோபோவாக மாறி ஆடியதால், அந்த பாதிப்பால் மறையவில்லை என்றார்.