விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்!
ADDED : 8 hours ago
இயக்குனர் சுந்தர். சி தற்போது நடிகை நயன்தாராவை முதன்மை வேடத்தில் வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். ஒரு கதாநாயகியாக நடிக்க ‛டிராகன்' படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோகரை ஒப்பந்தம் செய்துள்ளனர். மற்றொரு நாயகியாக நடிக்க சில தெலுங்கு சினிமா நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.