உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி

‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி


காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் அந்த படத்தின் இரண்டாம் பாகமாக காந்தாரா சாப்டர் 1 வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் ரிஷப் ஷெட்டி. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்ற ரிஷப் ஷெட்டி அங்கே தனது நண்பரான நடிகர் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

காந்தாரா படத்தின் வெற்றிக்காக ஜெயசூர்யா ஸ்பெஷலாக தயார் செய்து வைத்திருந்த கேக் ஒன்றை வெட்டி அவருடன் சேர்ந்து காந்தாரா 2 வின் வெற்றியை கொண்டாடி மகிழுந்துள்ளார் ரிஷப் ஷெட்டி இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா பகிர்ந்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் எப்படி நட்பு வளையத்திற்குள் வந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால் கடந்த வருடம் ஜெயசூர்யா கொல்லூர் மூகாம்பிகை கோவில் வழிபாட்டிற்கு சென்ற போது அவருக்கு கூடவே இருந்து தரிசனம் வரை உதவி செய்து வழியனுப்பி வைத்தவர் ரிஷப் ஷெட்டி தான். அதேபோல கடந்த வருடம் நடிகர் ஜெயசூர்யா ரஜினிகாந்தை சந்தித்தார்.. அந்த சந்திப்பும் ரிஷப் ஷெட்டி மூலமாகத்தான் நிகழ்ந்தது என்று கூறி அவருக்கு ஜெயசூர்யா நன்றி தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !