உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1

ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1

மலையாளத்தில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்து, ஆகஸ்ட் 28ம் தேதி திரைக்கு வந்த படம் லோகா சாப்டர் 1. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடியை கடந்து வசூலித்துள்ளது. குறிப்பாக மலையாளத்தில் மோகன்லாலின் எல்2 : எம்புரான் படம் 260 கோடி வசூலித்து முதலிடம் பிடித்திருந்த நிலையில், அதைவிட அதிகமாக வசூலித்து அந்த முதலிடத்தை லோகா சாப்டர் 1 படம் கைப்பற்றியிருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகா சாப்டர் 1 திரைக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்த நேரத்தில் இந்த படம் விரைவில் ஓடிடிக்கு வரப்போவதாக செய்தி வதந்தி வெளியானபோது அதை மறுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு போட்டிருந்த இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் துல்கர் சல்மான், அக்டோபர் 20ல் லோகா சாப்டர் 1 ஓடிடிக்கு வரப்போவதை விரைவில் அறிவிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !