உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி

'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கும் பிரமாண்ட படம் 'வாரணாசி'. மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் வெளியீட்டு விழா ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடந்தது. இதுவரை நடந்த சினிமா விழாக்களிலேயே இதுவே பிரமாண்ட விழா என்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே 27 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மேடையில் அமைக்கப்பட்ட எல்இடி தொழில்நுட்ப பின்னணிக்காக மட்டுமே ரூ. 8 கோடி செலவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செலவு விபரம் இப்போது சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !