கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா'
ADDED : 1 minutes ago
நிவின் பாலி நடித்து வரும் மலையாள படம் 'சர்வம் மாயா'. பிரபல இயக்குனர் சத்தியன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இயக்குகிறார். நிவின் பாலியுடன் அர்ஜுன் வர்க்கீஸ், ஜனார்த்தனன், பிரீத்தி முகுந்தன், ரகுநாத பலேரி, மது வாரியர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார், ஷரன் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் வெளியாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுநீள காமெடி படமாக உருவாகி உள்ளது.