வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல்
தமிழ் எழுத்துலகில் புகழ்பெற்ற கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ் குமார். இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இவரே சில படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.
முதன் முறையாக இவரது கிரைம் நாவலை தழுவி 'ரேகை' என்ற வெப் தொடர் தயாராகி உள்ளது. தினகரன் எம். உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ். குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ். சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
தொடர் குறித்து இயக்குனர் தினகரன் எம். கூறும்போது நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் தொடர் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அது என்ன என்பதுதான் தொடரின் கதை என்றார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.