உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ்

மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ்

தமிழைப் போலவே தெலுங்கிலும் அவ்வப்போது நட்சத்திர வாரிசுகள் நடிகர்களாக தொடர்ந்து களம் இறங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரர் ரமேஷ் பாபுவின் மகன் ஜெயகிருஷ்ணா கட்டமனேனி புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் மகள் ராஷா தடானி தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அஜய் பூபதி இயக்குகிறார்.

சமீபத்தில் ராஷா தடானி இந்த படத்தில் நடிக்கிறார் என ஒரு போஸ்டர் மூலம் அறிவித்த படக்குழுவினர் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார் என்கிற தகவலை 42 செகண்ட் வீடியோ கிளிப் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை எங்கள் படத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !