உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்'

பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்'


ராபின் ஹுட் படங்களின் பாணியில் உள்ளூர் ஹீரோக்களை மையமாக கொண்ட படங்களின் முன்னோடி எம்ஜிஆர் நடித்த 'மலைக்கள்ளன்'. பின்னர் அதே பாணியில் பல படங்கள் வந்தது. என்றாலும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வெளிவந்த படம் 'மலையூர் மம்பட்டியான்'.

மம்பட்டியானின் பெரிய வெற்றியை தொடர்ந்து அதே பாணியில் பல படங்கள் வந்தது, கும்பக்கரை தங்கையா, கொம்பேரி மூக்கன், கோவில்பட்டி வீரலட்சுமி என்று படங்கள் வரிசை கட்டியது. அவற்றில் முக்கியமானது 'கரிமேடு கருவாயன்'. நாகமலை காட்டில் வாழ்ந்ததாக கிராமிய பாடல்கள் மூலம் அறியப்படும் கருவாயனின் கதையை ராம நாராயணன் திரைப்படமாக்கினார். அவர் இயக்கிய படங்களில் முதல் பக்கா கமர்ஷியல் ஹிட் படம் இது,
இதில் கருவாயனாக விஜயகாந்த் நடித்தார், நாயகியாக நளினி நடித்தார். கதையும் கிட்டத்தட்ட மம்பட்டியான் கதை போன்றதுதான். மம்பட்டியானின் ஆயுதம் நாட்டுத் துப்பாகி கருவாயனின் ஆயுதம் உண்டி வில்.

பாண்டியன், அருணா, ராதாரவி, ஒய்.விஜயா, நம்பியார், செந்தாமரை உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். மம்பட்டியான் அளவிற்கு வெற்றிப் படமாக அமையாவிட்டாலும், ஓரளவிற்கான வெற்றிப்படம்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !