உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


நடிகை நயன்தாராவின் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று போலீஸ் டி.ஜி.பி.அலுவலதத்திற்கு மின்னஞ்சல் வந்தது.

இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் நயன்தாரா இல்லத்துக்கு விரைந்தனர். வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது. நடிகைகள் திரிஷா, சொர்ணமால்யா ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சமீபத்தில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. குறிப்பாக நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்துக்கு இதுவரை 20 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !