விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள்
ADDED : 1 hours ago
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிக்கும் கன்னட படம் ஒன்றின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதியில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பிற்காக வந்திருந்த சிவராஜ்குமார், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்கு பிறகு விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்கள் கேட்டபோது 'தமிழக அரசியல் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவரது அரசியல் பயணம் வரவேற்கத்தக்கது.
கரூர் பிரசாரத்தில் எவ்வாறு உயிர்ப்பலி ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. நடிகர் விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். சக நடிகராகவும், சகோதரனாகவும் சொல்கிறேன்'' என்றார்.