உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள்

ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள்

இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி தெலுங்கில் வெளியான 'உப்பனா' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்திற்கு பிறகு அவர் தெலுங்கில் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் தற்போது இவரை தெலுங்கு படங்களில் பார்க்க முடியவே இல்லை.

தமிழில் ‛வா வாத்தியார், எல்.ஐ.கே, ஜீனி' ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆனார். இவற்றில் ஜீனி தவிர்த்து மற்ற படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன. வா வாத்தியார் படம் டிசம்பர் 5ம் தேதியன்று, எல்.ஐ.கே டிசம்பர் 18ம் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 'ஜீனி' படத்தையும் டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிரமாக படக்குழு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஒருவேளை ஜீனி படமும் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வந்தால் ஒரே மாதத்தில் கிர்த்தி ஷெட்டிக்கு மூன்று படங்கள் திரைக்கு வந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !