ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு
ADDED : 22 minutes ago
கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் படங்களை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையன். ரஜினி, அமிதாபச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துசாரா விஜயன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் திரைக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் ஞானவேல் இணைய பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛ரஜினி - அமிதாப்பச்சன் உடன் பணியாற்றியது என்னுடைய கனவு நிஜமான தருணம். இயக்குனராக எனது பயணத்தில் ஒரு மைல் கல் படம் வேட்டையன். பலர் உச்சத்திற்கு சென்ற எடுத்துக்காட்டாக இருக்கலாம். ஆனால் உச்சத்திற்கு சென்ற பிறகும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள்தான் பென்ச் மார்க்'' என்று ரஜினியை பாராட்டி பதிவு போட்டுள்ளார் ஞானவேல்.