கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை
சிக்கந்தர், கண்ணப்பா படங்களுக்கு பிறகு ஹிந்தியில் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் மண்டோதரி வேடத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், அதையடுத்து தி இந்தியா ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்த காஜலுக்கு நீல் என்ற மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக வட மாநில பெண்கள் விரதம் இருந்து கடைபிடிக்கும் கர்வா சவுத் பூஜையை தனது இல்லத்தில் மேற்கொண்டார் காஜல் அகர்வால். இதற்கான ஆரம்பநாள் பூஜை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
அதோடு, ‛‛ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் சிறப்பானதாக மாற்றும் மக்களால் சூழப்பட்ட நாள். இதயம் நிறைந்தது, வயிறு நிறைந்தது, ஆன்மா நிறைந்தது. நம்மை வேரூன்றிய மரபுகளுக்கும், நம்மை வளர்க்கும் அன்புக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார் காஜல்.