உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின்

கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின்

சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தில் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன்பிறகு பியார் பிரேமா காதல், பார்க்கிங், லப்பர் பந்து என பல ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் தற்போது இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

டீசல் படத்தின் பரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, என்னை பொருத்தவரை தமிழ் சினிமாவில் கமல் சாருக்கு பிறகு ஒரு அழகான ஹீரோ என்றால் அவர் ஹரிஷ் கல்யாண் தான். இவர் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பேசினார்.

இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் போன்ற படங்களும் திரைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !