டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வருகிற 17ம் தேதி திரைக்கு வரும் படம் டியூட். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ள இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இதன் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
டியூட் படம் குறித்து பிரதீப் ரங்கநாதன் அளித்த ஒரு பேட்டியில், ‛‛டியூட் படம் வீடுகளில் நடக்கும் பிரச்னைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதற்கு முன்பு நான் நடித்த லவ் டுடே படத்திலிருந்து டியூட் படத்தில் 70% நகைச்சுவை இருக்கும். ஆனால் லவ் டுடேவுடன் ஒப்பிடும்போது அதிக உணர்ச்சி ஆழத்தைக் கொண்டிருக்கும். லவ் டுடே படத்தில் இறுதிப் பகுதியில் மட்டுமே மிகவும் சீரியசாக இருந்தன. ஆனால் இந்த படத்தில் இருபதாவது நிமிடத்தில் இருந்தே உணர்ச்சிப் பகுதிகள் தொடங்குகிறது.
டியூட் என்பது வெறும் நகைச்சுவை மட்டுமின்றி இளமை பருவத்திற்கும், குடும்பத்திற்கும் ஏற்ற படம். திருமணம் ஆனதால் உடல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் வரதட்சணை பிரச்சனை சந்தித்த பிறகும் உறவுகளை தக்க வைத்துக் கொள்ளும் பெண்கள் வீடுகளில் இருக்கிறார்கள். இவ்வளவு வேதனையான உறவை அவர்கள் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். திருமண சடங்கை விட அந்த நபர் முக்கியம். படத்தை பார்த்த பிறகு மக்கள் திருப்தி அடைவார்கள். லவ் டுடே மற்றும் டிராகனில் இருந்த நான் சேகரித்து பார்வையாளர்களை இழக்க மாட்டேன். அந்த அளவுக்கு டியூட் படம் ரசிகர்களுக்கு பெரிய அளவில் திருப்தியை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.