மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
ADDED : 13 minutes ago
2012ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 3 என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி, தங்க மகன், மாரி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இந்நிலையில் லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து அடுத்து தனுஷ் நடிப்பில் இயக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத். மேலும், இட்லி கடை படத்தை அடுத்து தற்போது விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடித்துவரும் தனுஷ், அந்த படத்தை முடித்ததும் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். டான் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.