சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன்
ADDED : 257 days ago
நடிகர் சூரி பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தாலும் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' அவரை பரபலமாக்கியது. அந்த படத்தின் பரோட்டா காமெடி தான் அவரை பிரபலமாக்க, பரோட்டா சூரியாக பிரபலமானார். அதன் பின்னர் சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால் உள்ளிட்ட படங்களில் சூரிக்கு நல்ல கதாபாத்திரம் தந்தவர் சுசீந்திரன்.
கடந்த சில வருடங்களாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. தற்போது சுசீந்திரன், சூரியை சந்தித்து அவரை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்குவதற்காக கதை கூறியுள்ளார். இந்த படத்தை சூரி தயாரித்து, கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்கிறார்கள்.