பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்'
ADDED : 42 minutes ago
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1 மற்றும் மாரி 2 ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். கடந்த சில மாதங்களாக பாலாஜி மோகன் காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரங்களில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதை நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'லவ்' என தலைப்பு வைத்து, அதன் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். இந்த வெப் தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது அறிவித்துள்ளனர்.