பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா'
ADDED : 8 minutes ago
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவர் பவன் கல்யாண் உடன் நடித்து வெளியான ஓஜி படம் வரவேற்பை பெற்றது. இப்போது முதல்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இதை ‛நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'மேட் இன் கொரியா' என்ற படத்தில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொரியாவில் படமாக்கியுள்ளனர். தற்போது படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்தப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.