உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா?

அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் திரைக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 6 மாதங்களும் தொடர்ந்து கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார் அஜித். இந்த நிலையில் அடுத்த மாதத்தில் அஜித் 64வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நேரத்தில் இந்த அஜித் 64 வது படம் ஏற்கனவே சரண் இயக்கிய அட்டகாசம் படத்தில் அஜித் நடித்த குரு என்ற கேரக்டரின் தொடர்ச்சி என்று ஒரு தகவல் வெளியாகி வந்தது. அதோடு இந்த அஜித்தின் 64வது படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இயக்குனர் சரணும் இணைந்து பணியாற்றுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சரண் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛இந்த செய்தியில் எதுவும் உண்மை இல்லை. அஜித் 64 வது படம் அட்டகாசம் குருவின் தொடர்ச்சி என்று செய்திகள் வெளியானதால்தான் நானும் அந்த படத்தில் இருப்பது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் நான் அந்த படத்தில் பணியாற்றவில்லை. குட் பேட் அக்லி படத்தை சிறப்பாக கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இந்த 64வது படத்தையும் அதே போன்று சிறப்பான முறையில் எடுப்பார் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற படங்களை இயக்கியவர் சரண். இதில் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தான் அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !