உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு?

இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு?


சென்னையில் நேற்று 'டியூட்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஹீரோயின் மமிதா பைஜூ, அதில் நடித்த சரத்குமார் , இசையமைப்பாளர் சாய்அபயங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பல நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் ஒரு நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து கலந்து கொண்டு காமெடி செய்தார். அவர் சின்ன வயது கெட்அப் போட்டு ஏதேதோ பேசினார். கடைசியில் சரத்குமார் முன்னால் சென்று உங்க மகளை நான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு அனுமதி தர வேண்டும் என்று மைக்கில் கேட்க, பலர் அதை விமர்சனம் செய்தனர்.

அதாவது, ஹீரோயின் மமிதா பைஜூவை திருமணம் செய்ய, சரத்குமாரிடம் அவர் கேட்பது போன்ற ஸ்கிரிப்ட். அது இந்த டோனில் வந்தது. அடுத்து கூமாப்பட்டி புகழ் தங்கபாண்டி மலையாளி வேடத்தில் வந்து காமெடி செய்தார். அப்போது டிரோனில் தாலி பறந்து வந்தது. அதை எடுத்து ஹீரோயின் மமிதா பைஜூவை திருமணம் செய்வேன், அவர் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று அடம்பிடித்தார். அவரோ நீங்க எனக்கு அண்ணன் என்று சமாளித்தார்.

இப்படி கல்லுாரியில் நடக்கும் சினிமா நிகழ்ச்சியில் திருமணம், தாலி குறித்து காமெடி பண்ணலாமா? குறிப்பாக, சரத்குமார், ஹீரோயின் மமிதா மனநிலை என்னவாக இருக்கும் என்று விழாவுக்கு வந்திருந்தவர்கள் முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !