ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்?
இப்போது 'ஜெயிலர் 2'வில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அடுத்த படம் குறித்து இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ரஜினி, கமல் இணையும் படமும் அறிவிப்புடன் இருக்கிறது. அதற்கு கதை, இயக்குனர் செட்டாகவில்லை என்று ரஜினியே சொல்லிவிட்டார். படத்தின் பட்ஜெட் விஷயத்தில் இன்னமும் பல கேள்விகள் வருவதாலும், கதை, இயக்குனர் விஷயத்தில் குழப்பம் நீடிப்பதாலும் அந்த படம் வருமா? வராதா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'புஷ்பா 2, குட் பேட் அக்லி'யை தயாரித்த, மைத்ரி நிறுவனம் அடுத்து ரஜினி படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதை படத்தின் தயாரிப்பாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். வேல்ஸ் நிறுவனமும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க ரெடி. ஏஜிஎஸ் நிறுவனமும் ஒரு ரஜினி படம் தயாரிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறது. ஆனால், இயக்குனர், கதை விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதால், அடுத்த படத்தை இன்னமும் ரஜினி அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.