உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


சமீப காலமாக தமிழகத்தில் பிரபலங்களின் வீடு, அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் மேற்கொண்ட சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. திடீரென இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அதிகாரிகளின் சோதனை காரணமாக சிறிது நேரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !