பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
ADDED : 45 days ago
தமிழில் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கில் நடித்து வந்தவர், பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து 'ரெட்ரோ' படத்தில் நடித்தார். 'கூலி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தற்போது விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்திருப்பவர், அதையடுத்து ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா-4' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அக்டோபர் 13ம் தேதியான நேற்று பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் ஒரு போஸ்டருடன் அவருக்கு ஜனநாயகன் படக்குழு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது. அந்த போஸ்டரில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.