உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு!

'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு!


மலையாளத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. அதன்பிறகு தமிழில் 'ரெபல்' என்ற படத்தில் நடித்தவர், தற்போது ஜனநாயகன், டியூட், சூர்யா 46வது படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'டியூட்' படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மமிதா பைஜூ கூறுகையில், ''இந்த டியூட் படத்தில் எனக்கு பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த காட்சிகளின் வசனத்தை சில நாட்களில் இரவில் தூங்காமல் மனப்பாடம் செய்து பயிற்சி எடுத்து நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும்'' என்கிறார் மமிதா பைஜூ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !