விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜாஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஜனநாயகன்'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
2026 ஜனவரி ஒன்பதாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த 'ஜனநாயகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்க ரோமியோ பிச்சர்ஸ், ஏஜிஎஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கிடையே போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் இப்படத்தை வாங்கி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.