உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!

மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்!


'தங்கலான்' படத்தை அடுத்து மோகன்லாலுக்கு ஜோடியாக 'ஹிருதயபூர்வம்' என்ற மலையாள படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்.

ஏற்கனவே சிரஞ்சீவியுடன் 'விஸ்வாம்பரா' என்ற படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதையடுத்து தற்போது 'மன சங்கர வரப்பிரசாத் காரு' என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தபடியாக ஏற்கனவே தன்னை வைத்து 'வால்டர் வீரய்யா' என்ற படத்தை இயக்கிய பாபி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் தான் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

ஏற்கனவே மோகன்லாலுக்கு ஜோடியாக ஹிருதப்பூர்வம் படத்தில் நடித்தபோது 65 வயது ஹீரோவுக்கு ஜோடியாக 32 வயது மாளவிகா மோகனன் நடிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது 70 வயதாகும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கப்போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !