பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து
ADDED : 1 hours ago
கல்கி 2898 ஏடி படத்தை அடுத்து கண்ணப்பா என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரபாஸ், அதையடுத்து தற்போது ‛தி ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பவுஜி, ஸ்பிரிட் போன்ற படங்களில் நடிக்கிறார். பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி அன்று தி ராஜா சாப் படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. அதேநாளில் ஹனு ராகவ புடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் பவுஜி படத்தின் முதல் பார்வையும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபாஸின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.