உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி

'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி


மியூசிக் ஆல்பங்கள், வெப் சீரிஸ், மாடலிங், நடிப்பு என அடுத்தடுத்த உயரங்களை எட்டிப் பிடித்து, இன்று தமிழகத்தின் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், நடிகை தேஜூ அஸ்வினி. 'என்ன சொல்ல போகிறாய்' திரைப்படம் மூலம் அன்று சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர், இன்று இவரது ரசிகர்களுக்கு 'என்ன சொல்ல போகிறார்', இதோ...

பூர்வீகம் ஆந்திரா. பிறந்தது, படிப்பு எல்லாம் 'நம்ம சென்னை' தான். கல்லுாரி முடித்த பின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவாறு மாடலிங்கில் ஈடுபட்டேன். அப்பா, கித்தார் கலைஞர். அம்மா குச்சிப்புடி நடன கலைஞர். இருவருக்கும் சினிமா தொடர்பு இருந்ததால் என்னமோ எனக்கும் சினிமா மீது ஆர்வம். எனது நடிப்பு பயணம் முதன் முதலில், நான் மாடலிங்காக இருந்தபோது 'பேரில் என்ன இருக்கு' என்ற 'ஷார்ட் பிலிமில்' இருந்து ஆரம்பித்தது.
அதையடுத்து, என்னை பெண்கள், ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சென்றது 'கல்யாண சமையல் சாதம்', 'டச் ஸ்கிரீன் காதல்' போன்ற வெப் சீரிஸ்கள்.

நடிகர் கவினுடனான 'அஸ்கு மாரோ', இசையமைப்பாளர் ஜி.வி., பிரகாஷூடனான 'படாக் படாக்' போன்ற மியூசிக் ஆல்பங்கள் இன்னும் என்னை பிரபலமாக்கின. சினிமா வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. 'என்ன சொல்ல போகிறாய்' படம் 'டபுள் ஹீரோயின்' கதை. எனக்கு அதில் ஜாலியான 'ஹேப்பி கேர்ள்' ரோல். அதில் எனது நடிப்பு குறித்து சோஷியல் மீடியா மூலம் இன்னும் ரசிகர்களிமிருந்து 'ரியாக்ஷன்ஸ்' வந்து கொண்டிருக்கிறது.

கை கொடுத்த 'பிளாக் மெயில்'

அடுத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதில் பெரிய ரோல் இல்லை. எனக்கு 'பிரேக்' தந்தது ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்த 'பிளாக் மெயில்'. என் சினிமா என்ட்ரிக்கு முதலில் பெற்றோர் தயங்கினர். ஆனால் கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. 'பிளாக் மெயில்' படம் நன்றாக அமைந்ததால் தப்பித்தேன். முதல் படத்தில் ஜாலி கேர்ள் ரோல் என்றால் இரண்டாவது படத்தில் அப்படியே 'ஆப்போசிட்'. படம் முழுக்க அழுகை. அதேநேரம் அந்த த்ரில்லர் மூவி, ரசிகர்களை நன்றாக கவர்ந்தது.

தற்போது தமிழில் 'மூன்றாம் கண்', தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். சமந்தாவுக்கு கிடைத்த 'தி பேமிலி மேன்' போன்ற அழுத்தமான ரோலில் நடிக்க ஆசை. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தீவிர ரசிகை நான்! 'ரொமான்ஸ்' படம் என்றால் ரொம்ப பிடிக்கும். 'விண்ணை தாண்டி வருவாயா', 'வேட்டையாடு விளையாடு' போன்ற படங்களை இன்னும் 'என்ஜாய்' பண்ணி பார்ப்பேன். நமக்கு 'பிளசன்ட்'டா எப்படி மூடு இருக்கோ அதற்கேற்ற படங்களை பார்க்கணும். சோகமான மனநிலையில் 'ரொமான்ஸ்' படம் பார்த்தால் 'செட்' ஆகாது. 'மூடுக்கு' ஏற்ப காமெடி, ஆக்ஷன், லவ் என படங்களை தேர்வு செய்து பார்த்தால் தான் 'ரிலாக்ஸ்' ஆக இருக்கும்.

'லைப் இஸ் வெரி சிம்பிள்'. எந்த விஷயத்தையும் தேவையில்லாமல் தலைக்குள் ஏத்தி வச்சுக்க கூடாது. எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க தெரியணும். அப்படி என்றால் தினமும் 'ஹேப்பி தீபாவளி' தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !