உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1'

கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1'

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா சாப்டர் 1'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலக அளவில் இதுவரையில் 765 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. விரைவில் 800 கோடி வசூலைக் கடந்து இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையைப் புரிய வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் இதுவரையில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 2022ல் வெளியான 'காந்தாரா படம் 185 கோடிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை தற்போது 'காந்தாரா சாப்டர் 1' முறியடித்துள்ளது. அங்கு மட்டும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை எந்த ஒரு கன்னடப் படமும் 200 கோடி வசூலைப் பெற்றதில்லை. கன்னட சினிமாவின் 90 வருட வரலாற்றில் இதுதான் முதல் சாதனை.

'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு 'காந்தாரா 1' படம் கன்னடத் திரையுலகத்தை இந்தியா முழுவதும் மீண்டும் பேச வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !