முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே
ADDED : 27 minutes ago
தெலுங்கு நடிகர் நானியின் அடுத்த படத்தை சாஹோ, ஓ.ஜி ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இயக்குகிறார். இந்த படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு 'பிளடி ரோமியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக நானி, பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இணைந்து 'சீதா ராமம்' படத்தில் நடிக்கவிருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்களால் இருவருமே அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா சில பேட்டிகளில் நானி உடன் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த வாய்ப்பு சீக்கிரமே நடக்க போகிறது.