உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா!

தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா!


தற்போது சீனி, பராசக்தி, ப்ரோ கோடு, கராத்தே பாபு போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரவி மோகன். அதோடு ரவி மோகன் ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ரவி மோகனின் நெருங்கிய தோழியான பாடகி கெனிஷாவும் பார்ட்னராக இருக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'ப்ரோ கோடு' படத்தில் ரவி மோகன் நடிக்க, கார்த்தி யோகி என்பவர் இயக்குகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ரவி மோகனும், கெனிஷாவும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் , நடிகர் யோகி பாபு ஆகியோருடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்கள். அப்போது ஜி.வி .பிரகாஷ் இசையமைக்க, 'கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...' என்ற பாடலை பாடியுள்ளார் கெனிஷா. இது குறித்த ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !