உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா

காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா


ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த 'தம்மா' படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக நவம்பர் 14ம் தேதி தெலுங்கில் அவர் நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் திரைக்கு வரப்போகிறது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆண்களை பொறுத்தவரை தங்களது காதல் தோல்வியை வெளிப்படுத்த தாடி வளர்க்கிறார்கள். சரக்கு அடித்து காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
அதேசமயம் பெண்களை பொறுத்தவரை தாடி வளர்க்க முடியாது. சரக்கு அடிக்க முடியாது. அதனால் மனதளவில் தங்களுக்குள்ளேயே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமல் சோகத்தை தங்களுக்குள் மறைத்துக்கொள்கிறார்கள். காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆண்கள் அளவுக்கு பெண்கள் காதல் பிரிவை நினைத்து கவலைப்படுவதில்லை என்று ஒரு கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது,'' என தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

மேலும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும், பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !