மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ்
சினிமாவில் வில்லனாக அறிமுகமான ஆனந்தராஜ், 'கவர்மெண்ட் மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் மீண்டும் வில்லனாக நடித்தார். பிறகு காமெடி, வில்லனாக நடித்தார்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு 'மதறாஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இதில் அவருடன் சம்யுக்தா, தீபா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஷகிலா, சசிலயா, ஆராத்யா, மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்ணா புரொடக் ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் ஏ.எஸ்.முகுந்தன் கூறும்போது, ''வட சென்னையின் மிகப்பெரிய டான் ஆக திகழும் ஆனந்த்ராஜின் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் இலக்குடன் காவல்துறை அதிகாரி சம்யுக்தா களமிறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு டானின் வாழ்க்கையையும், அவனது இறுதிகட்ட வாழ்க்கையையும் எதார்த்தமாகவும், அதேவேளை நகைச்சுவையாகவும் சொல்கிறோம் என்றார்.