உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை

போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை

சென்னையில் தற்போது கடும் மழை பெய்து வருவதால் பாதிப்புகள் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசும், பொதுமக்களும் இணைந்த வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் இணைய விரும்பிய நடிகை அம்பிகா அதற்கான லிங்கிற்கு சென்று வாட்ஸ்அப் குழுவில் சேர முயன்றபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு சென்று துணை கமிஷனர் விஜயகுமாரிடம் இதுகுறித்து முறையிட்டார். கமிஷனர் இது குறித்து விசாரித்தபோது வாட்ஸ்அப் குழுவில் ஆயிரம் பேருக்கு மேல் சேர்க்க இயலாது. அம்பிகாவின் கோரிக்கை தாமதமாக கிடைத்ததால் சேர்க்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.

அதைதொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையின் தன்னார்வலர்கள் குழுவில் நடிகை அம்பிகாவை இணைப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் திரும்பினார் அம்பிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !