போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
ADDED : 1 hours ago
போதை பொருள் பயன்படுத்தியதாக தமிழ் நடிகர்கள், ஸ்ரீகாந்த், மற்றும் கிருஷ்ணா கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் விடப்பட்டனர். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
போதை மருந்து தொடர்பான வழக்கு நடந்து வரும் அதே நேரத்தில் இந்த விஷயத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்கிற கோணத்தில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரிடம் விசாரணை நடத்த வசதியாக அவர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் வருகிற 28ம் தேதியும், கிருஷ்ணா 29ம் தேதியும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.