ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா'
அம்மணி, மாவீரன், தண்டட்டி, அயலான் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். சில குறும்படங்களையும் இயக்கி உள்ளார். இவர் முதன்முறையாக ‛மயிலா' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் அடுத்தாண்டு நெதர்லாந்தில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை நடக்கும் 55வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிரைட் ப்யூச்சர் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.
கிராம பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது. மயிலாவாக மெலோடி டார்கஸ், இவரது மகளாக சுடர்கொடி நடித்துள்ளார். மேலும் கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.