அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள்
ADDED : 62 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். தனது குடும்பத்தினர் மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பவர். மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் அவர் நேரம் செலவிடும் புகைப்படங்கள் ஏற்கெனவே வந்து பரபரப்பை ஏற்படுத்தியவை. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்கும் அவருடைய ஈடுபாடு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
நேற்று கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சட்டையில்லாமல் மேல் துண்டுடன் அவர் தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகின. அஜித்தின் மார்பில் ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் 'டாட்டூ' வடிவில் குத்தப்பட்டுள்ளது. அது ரசிகர்களிடம் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அஜித்தின் குல தெய்வ கோவிலாம்.