உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா

டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரை பாலய்யா என செல்லமாக அழைப்பார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வருகிறார் என்றால் ஜெய் பாலய்யா என தொண்டை கிழிய ரசிகர்கள் கத்திக் கொண்டே இருப்பார்கள். சென்னை சுற்று வட்டாரத்திலும் பாலகிருஷ்ணாவுக்கு ரசிகர் கூட்டம் உண்டு. சென்னையில் படிக்கும் ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள் அவர் படங்களை இங்கும் கொண்டாடுவார்கள். அதனால், தமிழகத்திலும் பாலகிருஷ்ணா படங்கள் கணிசமாக திரையிடப்படுகிறது.

2021ல் அவர் நடித்த அகண்டா தமிழகத்திலும் வெளியாக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அகண்டா பார்ட் 2, டிசம்பர் 5ம் தேதி தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் டப்பாகி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அகண்டா 2 படத்தின் முன்னோட்ட வீடியோவில், ‛‛சவுண்டை கண்ட்ரோல்ல வெச்சுக்கோ, எந்த சவுண்டுக்கு சிரிப்பேன், எந்த சவுண்வுக்கு வெட்டுவேன்னு எனக்கே தெரியாது. உன்னால நினைச்சு கூட பார்க்க முடியாது'' என்று பாலகிருஷ்ணா ஆக்ரோசமாக பேசும் டயலாக் தமிழிலும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !