உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர்

கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர்

தமிழில் ‛டிராகன்' படத்தில் நடித்தபின் கயாடு லோஹருக்கு தனி மவுசு ஏற்பட்டது. அவரை தங்கள் படங்களில் புக் பண்ண பலரும் துடித்தார்கள். ஆனால், சில பார்ட்டி சர்ச்சைகளில் அவர் சிக்கியதால், அவருக்கான மார்க்கெட் டல் ஆனது. இப்போது அவர் நடிப்பில் இதயம் முரளி மட்டுமே விரைவில் வர இருக்கிறது. அடுத்து நடிக்கும் சில படங்கள் தள்ளிப்போகிறது. இதனால், கவர்ச்சிக்கு மாறி, பட வாய்ப்புகளை கவர்ந்து இழுப்பது என அவர் முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.

முதற்கட்டமாக கவர்ச்சியாக ஒரு போட்டோசெஷன், வீடியோ ஷூட் எடுத்து ரிலீஸ் செய்யப் போகிறாராம். இப்போதைக்கு ஜி.வி.பிரகாஷ், விஷால், சிம்புவுடன் அடுத்த படங்களில் நடிக்க அவர் கமிட்டாகி இருக்கிறாராம். மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து டூயட் ஆட வேண்டும். கோடிகளில் சம்பளத்தை வாங்கி குவிக்க வேண்டும் என்பது கயாடு லோஹரின் எதிர்கால பிளானாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !