எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை
மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வளர்ந்து வருபவர் மேத்யூ தாமஸ். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய், திரிஷாவின் மகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் ஒரே படத்தில் நன்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள நெல்லிக்காம்போயில் நைட் ரைடர்ஸ் என்கிற படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய மேத்யூ தாமஸ் லியோ படத்தில் நடிக்கும்போது ஆரம்பத்திலேயே திரிஷா தன்னிடம் சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரண்டாம் நாள் நாள் படப்பிடிப்பின் போது மேத்யூ தாமஸிடம் பேசிய திரிஷா எனக்கு இந்த வயதில் இருக்கும் ஒரு மகனுக்கு அம்மாவாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என்று கூறினாராம். அதற்கு மேத்யூ தாமஸும் திரிஷாவிடம் எனக்கும் உங்களுக்கு மகனாக நடிக்க விருப்பம் இல்லை தான்.. நான் கூட இந்த படத்தில் உங்களுக்கு வளர்ப்பு மகனாக நடிக்கிறேன் என்று தான் நினைத்திருந்தேன் என்று பதிலுக்கு கூறினேன்” என்று திரிஷாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் மேத்யூ தாமஸ்.